Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாவ் வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்தை வாரி சுருட்டியது !

Advertiesment
வாவ் வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்தை வாரி சுருட்டியது !
, ஞாயிறு, 27 ஜனவரி 2019 (10:07 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் பார்படாஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் ஹெட்மைர் அதிகபட்சமாக 81 ரன்கள் சேர்த்தார்.

அதைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி அதிர்ச்சியளிக்கும் விதமாக மடமடவென விக்கெட்களை இழந்து 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அந்த அணி வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் வரிசையாக பெவிலியனுக்கு மைதானத்துக்கும் அணி வகுப்பு நடத்தினர். வெஸ்ட் இண்டீஸின் கீமார் ரோச் அதிகபட்சமாக 5 விக்க்ட்களைக் கைப்பற்றினார். இதனால் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 212 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இருந்தும் பாலோ ஆன் கொடுக்காமல் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி ஆடியது.
webdunia

இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் ஹோல்டரின் அபாரமான இரட்டைச்சதத்தாலும் டோரிக்கின் சதத்தாலும் 6 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஹோல்டர் 202 ரன்களோடும் டோவ்ரிக் 116 ரன்களோடும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இங்கிலாந்து வெற்றிக்கு 627 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் அந்த அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியைத் தோற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸின் ரோஸ்டன் ச்சேஸ் அபாரமாக பந்துவீசி 8 விக்கெட்களைக் கைப்பற்றினார். வலுவான அணியாக கருதப்பட்ட இங்கிலாந்து அணி வலிமையற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டைச்சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஒசாகா