Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆல்ரவுண்டர் என நிரூபித்த ஹர்திக் பண்டியா

Advertiesment
ஆல்ரவுண்டர் என நிரூபித்த ஹர்திக் பண்டியா
, செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (15:03 IST)
இங்கிலாந்து அணி எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தான் ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார்.

 
இந்திய - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் செய்த இந்திய தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 6 ஓவர்கள் மட்டுமே வீசிய ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் விரைவாக வெளியேற்றினார். இதன்மூலம் இந்திய அணி 168 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
 
இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 3 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கேப்டன் கோஹ்லி இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார். 
 
ஹர்திக் பாண்டியா 52 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தபோது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. அப்போது ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி மூலம் ஹர்திக் பாண்டியா தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய விளையாட்டு போட்டி : பெண்கள் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற வினேஷ் போகத்