இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடி வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 521 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் அருமையாக விளையாடி கேப்டன் விராத் கோஹ்லி, 103 ரன்கள் எடுத்தார். இந்த சதம் விராத் கோஹ்லிக்கு 23வது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் வெற்றிக்கு தேவையான 521 ரன்களை இங்கிலாந்து எடுக்கப்போகின்றதா? அல்லது இந்திய அணி விரைவில் பத்து விக்கெட்டுக்களை வீழ்த்தப்போகின்றதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்