Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வெற்றி கிடைக்கும் போது சம்மட்டி அடியாக இருக்கும்: ஹர்பஜன்சிங்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (07:17 IST)
நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது
 
இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே சென்னை அணியின் பக்கம்தான் போட்டி இருந்தது. ஆனால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை திடீரென சென்னை அணி தோல்வி முகத்தை அடைந்தது 
 
கடைசி நேரத்தில் கேதார் ஜாதவ்வின் மோசமான ஆட்டம் சென்னை அணியின் தோல்வியை உறுதி செய்தது நேற்றைய தோல்வியை சென்னை ரசிகர்கள் பலர் ஜீரணிக்கவே முடியவில்லை. கையில் கிடைத்த வெற்றியை நழுவ விட்டதால் அணி நிர்வாகிகள் குறிப்பாக கேப்டன் தோனியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்
 
கேதார் ஜாதவ் போன்ற மோசமான வீரர்களை அணியில் வைத்திருந்தால் எப்படி ஜெயிக்க முடியும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை அணியின் வீரர்களில் ஒருவரான ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:
 
இதுவும் கடந்து போகும். என்னுடைய தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது. ஆனால் என்னுடைய வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம். மீண்டும் வெற்றி முகம் காணும்போது அந்த அடி சம்மட்டி அடியாக இருக்கும். சிஎஸ்கே திரும்பி வருவதை ஐபிஎல் சரித்திரம் பேசும்’ என்று குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments