Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேவலமாக விளையாடிய கேதார்: சிஎஸ்கே ரசிகர்கள் ஆத்திரம்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (07:03 IST)
கேவலமாக விளையாடிய கேதார்: சிஎஸ்கே ரசிகர்கள் ஆத்திரம்
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதி சென்னை அணி மிக எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் வெற்றியை கோட்டை விட்டது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது 
 
168 என்ற எளிய கொல்கத்தா அணியின் எளிய இலக்கை கிட்டத்தட்ட சென்னை அணி நெருங்கிவிட்டது என்றே சொல்லலாம். 12 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 99 ரன்கள் அடித்து விட்ட சென்னை அணியின் மீதமுள்ள 8 ஓவர்களில் 69 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டி இருந்த நிலையில் திடீரென வாட்சன், அம்பத்திராயுடு, தோனி, சாம்கரன் ஆகியோர்களின் விக்கெட்டுகள் விழுந்தால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது 
 
ஆனாலும் ஒரு கட்டத்தில் 21 பந்துகளில் 39 ரன்கள் என்று இருந்த நிலையில் களமிறங்கிய கேதார் ஜாதவ்வின் மோசமான ஆட்டம் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அவர் 17 பந்துகளை சந்தித்து 12 பந்துகளில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் சந்தித்த முதல் மூன்று பந்துகளில் ஒரு ரன் கூட இல்லை
 
அதுமட்டுமின்றி கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் கேதார் ஜாதவ் ரன்னுக்கு ஓடாமல் நின்று இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த ரன்னுக்கு ஓடி இருந்தால் மீதமிருந்த 5 பந்துகளில் 25 ரன்களை எடுக்க ஜடேஜா ஏதாவது முயற்சித்திருப்பார். ஏனெனில் அவர் கடைசி மூன்று பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே நேற்றைய தோல்விக்கு முழுக்க முழுக்க கேதர் ஜாதவ்வின் கேவலமான ஆட்டம் ஒன்றே காரணம் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments