Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பையில் இந்திய எடுத்த மோசமான முடிவு இதுதான் – கம்பீர் ஆவேசம் !

உலகக்கோப்பையில் இந்திய எடுத்த மோசமான முடிவு இதுதான் – கம்பீர் ஆவேசம் !
, செவ்வாய், 14 ஜனவரி 2020 (09:05 IST)
இந்திய அணி உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் முகமது ஷமியை தேர்ந்தெடுக்காததுதான் மிக மோசமான முடிவு என கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் உலகக் கோப்பையில் இந்தியா செய்த மிக மோசமான தவறு என்ன என்பது குறித்துப் பேசியுள்ளார்.

’ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர்ஆஸ்திரேலியாவின் தலை சிறந்த வீரர்களான வார்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோருக்கு எப்படி வீசுவார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களை வீசுவது நல்ல விஷயமாகும். ஷமியிடம்  நல்ல வேகம் உள்ளது அவரை உலக கோப்பை அரை இறுதியில் தேர்ந்தெடுக்காதது இந்தியா செய்த மிக மோசமான தவறாகும. நல்ல பார்மில் இருந்த அவரை உட்கார வைத்து தான் மிகப்பெரிய சிக்கல். இந்திய மைதானங்களில் ஷமி நன்றாக வீசக்குடியவர் அவர் இப்போது இருக்கும் பார்மில் இந்திய அணிக்கு கவலை இல்லை என்றே நான் கருதுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலிக்கு போட்டியான மனைவி அனுஷ்கா சர்மா !