Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் பதவியில் இருந்து விலகிய கம்பீர்...

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (16:53 IST)
ஐபிஎல் போட்டி 11 வது சீசன் நடைபெற்று வருகிரது. இதில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்ப்பட்டு வந்த கம்பீர், அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 
 
கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கி இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கம்பீரை இந்த முறை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால், இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படவில்லை.
 
36 வயதான இவர், இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். முதல் போட்டியில் 55, மற்றும் 8,3, 4 என முறையே அடுத்தடுத்த போட்டிகளில் ரன் எடுத்துள்ளார்.
 
இந்நிலையில், அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கம்பீர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இது என்னுடைய முடிவு, நான் அணிக்கு போதுமான அளவு பங்களிக்கவில்லை. அணிக்கு தலைவர் என்ற பொறுப்பை நான் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது, சரியான நேரம் என்று உணர்ந்தேன்.
 
ஆனால், கடினமான சூழ்நிலைகளில் என்னால் திறம்பட செயல்பட முடியவில்லை. ஆகையால், கேப்டன் பதவியில் இருந்து நான் விலகுகிறேன் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 
 
கவுதம் கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது.. மத்திய அரசு அறிவிப்பு..!

ஓய்வறையில் நடந்தது அங்கேயே இருக்கட்டும்.. அணிக்குதான் முக்கியத்துவம்- கம்பீர் பதில்!

நாளைக்கு ரோஹித் ஷர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு கம்பீரின் மழுப்பல் பதில்!

மனு பாக்கர், குகேஷுக்கு கேல் ரத்னா விருது… துளசிமதிக்கு அர்ஜுனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு

மீண்டும் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கிறாரா விராட் கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments