Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் 2018: பஞ்சாப் அணியை சமாளிக்குமா டெல்லி

Advertiesment
ஐபிஎல் 2018: பஞ்சாப் அணியை சமாளிக்குமா டெல்லி
, திங்கள், 23 ஏப்ரல் 2018 (11:07 IST)
டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை டெல்லி அணி எதிர்கொள்கிறது.
 
11-வது ஐபிஎல் தொடரின் 22-வது ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணியும், கவுதம் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளுக்கும் இது ஆறாவது போட்டியாகும், பஞ்சாப் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது. ஆனால், டெல்லி அணி 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டும் வென்றுள்ளது.
webdunia
 
ஐபில் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 9 போட்டியில் டெல்லி அணியும், 12 போட்டியில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓய்வு எப்போது? யுவராஜ்சிங் அதிரடி அறிவிப்பு