Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 ஆண்டுகளில் முதல்முறையாக… பாலோன் டியோர் விருதில் ரொனால்டோ மிஸ்ஸிங்!

Advertiesment
ronaldo
, வியாழன், 7 செப்டம்பர் 2023 (09:36 IST)
உலக கால்பந்து ஜாம்பவனான ரொனால்டோவின் பெயர் பாலோன் டியோர் விருது பட்டியலில் இடம் பெறாதது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கால்பந்து வீரர்கள் முதன்மையானவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். என்னதான் பல உலக கால்பந்து போட்டிகள் கோப்பைகளை வென்றாலும், சிறந்த கால்பந்து வீரருக்கு தரப்படும் பாலோன் டியோர் (Ballon d’Or) விருதுகள்தான் கால்பந்தின் ஆஸ்கர் விருது போல மதிப்பு மிக்கது.

கால்பந்து ஜாம்பவனான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் ஒவ்வொரு ஆண்டும் பாலோன் டியோர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து பாலோன் டியோர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சாதனையை ரொனால்டோ பெற்றுள்ளார். இதுவரை 5 முறை பாலோன் டியோர் விருதையும் பெற்றுள்ளார்.

ஆனால் இந்த ஆண்டு பாலோன் டியோர் விருது பரிந்துரை பட்டியலில் ரொனால்டோவின் பெயர் இடம்பெறவில்லை. இது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ரொனால்டோ எந்த வகையில் பரிந்துரைக்கு தகுதியற்றவர் ஆனார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கோவங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வீரர் இல்லாத உலகக் கோப்பை அணி!