Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வின்னிங் ஷாட் அடிக்க ருத்ராஜ்-க்கு வாய்ப்பு கொடுத்த தோனி.. அதுதான் தல..!

Siva
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:20 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வின்னிங் ஷாட் அடிக்க தல தோனிக்கு வாய்ப்பு கிடைத்தும் அதை அவர் பயன்படுத்தாமல் ருத்ராஜ்-க்கு கொடுத்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி படுமோசமாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 34 ரன்கள் எடுத்திருந்தார்

பந்துவீச்சை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆனியன் தேஷ் பாண்டே மூன்று விக்கெட்டுகளையும் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த நிலையில் 138 என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 15 ரன்களில் அவுட் ஆனாலும் கேப்டன் ருத்ராஜ் மிகவும் பொறுப்புடன் விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்

இந்த நிலையில் சிஎஸ்கே அணி 17.3வது ஓவரில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது களத்தில் இருந்த தோனி நினைத்திருந்தால் இரண்டு ரன்களை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு ரன் மட்டும் எடுத்து வின்னிங் ஷாட்டை ருத்ராஜ் அடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ருத்ராஜ் ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தோனி பலமுறை வின்னிங் ஷாட் அடிப்பதற்கு தனது சக பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்ததை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்.. 3வது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றி..!

TNPL தொடர்… பந்தை சேதப்படுத்திய அஸ்வின் மீது புகார்… TNPL நிர்வாகம் எடுத்த முடிவு!

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments