Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரசிகர்களால் தெறிக்கப் போகும் சேப்பாக்கம் மைதானம்..! சென்னை அணி பந்துவீச்சு..!!

CSK KL

Senthil Velan

, திங்கள், 8 ஏப்ரல் 2024 (19:13 IST)
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
 
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 21 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று  ருதுராஜ் கெய்க்வாட்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
 
சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்னும் சில மணி நேரங்களில் போட்டி துவங்க உள்ள நிலையில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
 
சென்னை அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்ற சென்னை அணி, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க முனைப்பு காட்டுகிறது.
 
அதேநேரம், கொல்கத்தா அணியோ விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலும் வென்று முதலிடத்திற்கு முன்னேற தீவிரமாக உள்ளது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல்வியே காணாத கொல்கத்தாவை வீழ்த்துமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று CSK vs KKR அதிரடி ஆட்டம்!