CSK vs KKR: பட்டைய கிளப்பும் சென்னை கிங்ஸ்....ஜெயிக்க போவது யார்?

Sinoj
திங்கள், 8 ஏப்ரல் 2024 (22:00 IST)
ஐபிஎல்-2024  லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ருத்துராஜ் தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
 
எனவே முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில், நரேன் 27 ரன்னும்,  அங்கிரிஸ் 24 ரன்னும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 34 ரன்னும், ராமன் திப் சிங் 13 ரன்னும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து, சென்னைக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
 
சென்னை அணி தரப்பில், துஷர் ஜடேஜா தலா 3 விக்கெட்டும், ரஹ்மான் மற்ரும் தாகூர் தலா 2 விக்கெட்டும், மகீஸ் 1  விக்கெட்டும் கைப்பற்றினர். 
 
2 வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் சென்னை கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா 15 ரன்னுடன் அவுட்டானார். கெய்க்வாட் 32 ரன்னுடனும், மிட்செல் 3 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். தற்போது சென்னை அணி 6 ஓவரில் 1விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வருகிறது. 
 
இந்த ரன்ரேட்டில் விளையாடினால் சென்னை கிங்ஸ் அணி சூப்பர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்,. இருப்பினும் கொல்கத்தா அணியைக் குறைத்து மதிப்பிட முடியாது என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
 
கொல்கத்தா தரப்பில் அரோரா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments