Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே போட்டி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகள்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (07:16 IST)
ஒரே போட்டி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகள்!
நேற்று நடந்த டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும் தோல்வி அடைந்த பெங்களூரு அணியும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றைய ஆட்டம் ஆரம்பிக்கும் முன் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்ற நிலை இருந்தது. ஆனால் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்த 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. 153 ரன்கள் என்ற இலக்கை 17.3 ஓவர்களுக்குள் டெல்லி அணி எடுத்தால் கொல்கத்தா தகுதி பெற்று விடும் என்றும் பெங்களூரு வெளியேறி விடும் என்றும் கால்குலேஷன் செய்யப்பட்டது
 
ஆனால் டெல்லி அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதால் பெங்களூரு அணியின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிளே ஆப் சுற்றுக்கு மும்பை டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் தகுதி பெற்றுள்ளன 
 
இன்று நடைபெறும் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஒருவேளை ஐதராபாத் அணி தோல்வியடைந்தால் கொல்கத்தா அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று நடந்த ஒரே போட்டியில் வெற்றி பெற்ற, தோல்வி பெற்ற இரண்டு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments