Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவை பறித்த ஷார்ட் ரன்! கடுப்பான ரசிகர்கள்!

Advertiesment
பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவை பறித்த ஷார்ட் ரன்! கடுப்பான ரசிகர்கள்!
, திங்கள், 2 நவம்பர் 2020 (11:16 IST)
பஞ்சாப் அணி நேற்று சென்னையிடம் தோற்றதை அடுத்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சென்னையிடம் தோற்றதால் பிளே ஆப்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் பஞ்சாப் அணி வெளியேறியதற்கு நடுவர் செய்த ஒரு சிறிய தவறே காரணம் என புகார் எழுந்துள்ளது. செப்டம்பர் 20 ஆம் தேதி நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது 19வது ஓவரில் ரபோடா வீசிய பந்தை ஜோர்டான் லாங் லாங் ஆன் அடித்துவிட்டு ஓடி ரன் எடுத்தார்.

அப்போது மட்டையால் ரீச்சை அவர் தொடவில்லை என ஒரு ரன்னை அம்பயர் நிதின் மேனன் குறைத்தார். தற்போது அந்த வீடியோவை கவனித்ததில் ஜோர்டான் ரீச்சை தொட்டது தெரிய வந்துள்ளது. அப்போது அந்த ஒரு ரன் அளிக்கப்பட்டிருந்தால் சூப்பர் ஓவர் போகாமலே பஞ்சாப் வெற்றி பெற்றிருக்கும். இதனால் வெற்றி வாய்ப்பு டெல்லிக்கு போனது.

அந்த போட்டியில் மட்டும் தவறு நடக்காமல் இருந்திருந்தால் பஞ்சாப் அணிக்கு மேலும் 2 புள்ளிகள் கிடைத்து பிளே ஆஃப் செலவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். இதனால் பஞ்சாப் அணி ரசிகர்கள் கடுப்பாகி இணையத்தில் நடுவருக்கு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இழந்த ஜிம்பாப்வே!