ஐபிஎல் தொடரின் 33 ஆவது போட்டியில் இன்று நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன
இந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா டாஸ் வென்ற எடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து மும்பை அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மொயின் அலி மற்றும் ஜோர்டான் ஆகிய இருவருக்கு பதிலாக மிட்ச் சாண்ட்னர் மற்றும் பிரிடேரியஸ் அணியில் இணைந்துள்ளனர். சிஎஸ்கே அணியில் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் பட்டியல் இதோ:
ருத்ராஜ், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஷிவம் டூபே, தோனி, ஜடேஜா, பிராவோ, மிட்சல் சாண்ட்னர், பிரிட்டேரியஸ், மகேஷ் தீக்சனா, முகேஷ் செளத்ரி