Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது அவுட்டா? அவுட் இல்லையா? 200 வருட கிரிக்கெட் வரலாற்றில் புது பிரச்சனை

இது அவுட்டா? அவுட் இல்லையா? 200 வருட கிரிக்கெட் வரலாற்றில் புது பிரச்சனை
, புதன், 10 மே 2017 (00:28 IST)
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேன் பல வழிகளில் அவுட் ஆவார். அவற்றில் ஒன்று போல்ட் எனப்படும் ஸ்டம்ப்பை வீழ்த்துதல். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு பேட்ஸ்மேனின் அவுட் பெரும் சர்ச்சையாகியுள்ளது.



 


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மிட் இயர் அசோசியேஷன் சார்பில் ஒரு கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் வீசப்பட்ட பந்து ஒன்றை பேட்ஸ்மேன் நழுவ விட்டதால் பந்து மிடில் ஸ்டெம்பை பதம்பார்த்தது. ஆனால் பெல்ஸ்கள் இரண்டும் விழாமல், மற்ற இரு ஸ்டெம்புகளின் உதவியுடன் அப்படியே இருந்தன.

இதைப்பார்த்த அம்பயர் உடனே அவுட் கொடுத்துவிட்டார். பைல்ஸ்கள் விழுந்தால்தான் அவுட் என ஒரு சாரார் வாதம் செய்ய, ஸ்டம்ப் விழுந்தாலே அவுட் தான் என்று இன்னொரு சாரார் கூற இது பெரும் விவாத பொருளாகிவிட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் விதி எண் 28ல் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், பைல்ஸ்களில் ஒன்றாவது விழுந்தாலும் ஸ்டெம்புகளில் ஒன்றாவது பிடுங்கப்பட்டுவிட்டாலும் போல்ட் அவுட் அளிக்கலாம் என்று இருந்ததை கணக்கில் கொண்டு அந்த அம்பயரின் முடிவு சரிதான் என்று இந்த பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்லா இல்லாமல் கொல்கத்தாவிடம் சிக்கிய பஞ்சாப்