Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை – பனிதீர்க்குமா நியுசிலாந்து !

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (12:19 IST)
உலகக்கோப்பையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.

உலகக்கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இரு அணிகளுமே இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்துக்குள் வந்துள்ளன. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸி. 6 போட்டிகளில் வென்று அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுள்ள ஒரே அணியாக உள்ளது. நியுசிலாந்து அணி 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது. அதனால் அரையிறுதிக்கு தகுதிப்பெற இந்தப் போட்டியில் வெல்ல வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

இரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பைகளில் 10 முறை மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா  7 முறையும் நியுசிலாந்து 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸி அணி நியுசிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் அதற்குப் பழிதீர்க்கும் உத்வேகத்தில் உள்ளது நியுசிலாந்து அணி. இந்த போட்டி இன்று மாலை மூன்று மணிக்குத் தொடங்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments