இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2 வது போட்டியில் ஆஸ்திரேலியாவை 36 ரன் வித்தியாசத்திலும், 4 வது போட்டியில் பாகிஸ்தானை 89 ரன் வித்தியாசத்திலும், 5 வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 11 ரன்னிலும் தோற்கடித்தது. நியூசிலாந்துக்கு எதிரான 3 வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பியதால் இந்தப் போட்டியில் ஏதேனும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாற்றம் இல்லாமல் களமிறங்கியுள்ளது.