Webdunia - Bharat's app for daily news and videos

Install App

191 ரன்னுக்கு 7 விக்கெட் – இரண்டாம் நாள் ஆட்ட முடிவு

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (14:12 IST)
ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் முடிவில்  ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்தியா அஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா முன்வரிசை ஆட்டக்காரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் தடுமாறியது. இந்திய அணியை புஜாராவின் தனது சிறப்பான ஆட்டத்தால் கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 250 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்களும் ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அடுத்து இன்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மட்டும் நிலைத்து நின்று 61 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். மற்ற வீரர்கள் அனைவரும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தங்கள் விக்கெட்களை இழந்துள்ளனர். சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 3 விக்கெட்களும் , இசாந்த் ஷர்மா மற்றும் பூம்ரா தலா 2 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.

ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்களோடும் ஸ்டார் 8 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சன்ரைசர்ஸை வெளுத்து வாங்கிய கொல்கத்தா! நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி.! தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு..!

குவாலிஃபையர் 1: டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு.. ரன்மழை பொழியுமா?

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments