Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பிறந்த 8 மாதங்களில் மீண்டும் கிரிக்கெட்: வீராஙகனைக்கு குவியும் பாராட்டு

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (08:36 IST)
குழந்தை பிறந்த 8 மாதங்களில் மீண்டும் கிரிக்கெட்
பொதுவாக கிரிக்கெட் வீராங்கனைகள் குழந்தை பிறந்தால் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று விடுவார்கள் என்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் குழந்தை பிறந்த எட்டே மாதங்களில் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது 
 
ஆஸ்திரேலிய நாட்டின் மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் எமி சாட்டர்வெயிட். இவர் கடந்த ஆண்டு  கர்ப்பமான நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒரு சில வாரங்களில் இவர் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தற்போது இவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதால் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையில் விரைவில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டி தொடரில் எமி சாட்டர்வெயிட் கலந்து கொள்வார் என்று ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தை பிறந்த எட்டே மாதங்களில் எமி சாட்டர்வெயிட் அணிக்கு திரும்பி உள்ளதை அடுத்து அவருக்கு சக வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments