Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்2020 - கொல்கத்தா அணியைத் துவம்சம் செய்து.... மும்பை இந்தியன்ஸ் வெற்றி !

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (23:52 IST)
இந்த வருடம் ஐபிஎல் போட்டி கொரொனா தாக்கத்தால் துரதிஷ்டவசமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையுடன் தோற்றுள்ள நிலையில் இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளது. இன்றைய ஆட்டமும் அனல் பறக்கும் என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்தனர்.

ஏற்கனவே முதல் மேட்சில் தோற்ற வெறியுடன் ஆடிய மும்பை இந்தியன் அதிரடியாக ஆடியது. ரோஹித் சர்மா 54 பந்தில் 80 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்திக் பாண்டியா - 18(13) அவுட் ஆனார். எனவே மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. எனவே  மும்பை இந்தியன்ஸ் 49 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

‘யாருப்பா நீ.. நல்லா பவுலிங் போட்ட’… தோனியே அழைத்துப் பாராட்டிய விக்னேஷ் புத்தூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments