Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஹாரியின் ஒவ்வொரு ஷாட்டும் சதத்துக்கு ஒப்பானது – அஸ்வின் புகழாரம்!

விஹாரியின் ஒவ்வொரு ஷாட்டும் சதத்துக்கு ஒப்பானது – அஸ்வின் புகழாரம்!
, திங்கள், 11 ஜனவரி 2021 (17:32 IST)
இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரியை அஸ்வின் புகழ்ந்து பேசியுள்ளார்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் 403 ரன்களை துரத்திய இந்திய அணி 334 ரன்கள் சேர்த்து போட்டியை டிரா செய்துள்ளது. இந்த டிராவுக்கு முக்கியக் காரணம் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரின் நிதானமான ஆட்டம்தான். இவர்கள் இருவரும் சேர்ந்து 250 பந்துகளுக்கு மேல் சந்தித்து விக்கெட்களை பறிகொடுக்காமல் விளையாடி போட்டியை டிரா செய்தனர். அஸ்வின் 128 பந்துகளைச் சந்தித்து 39 ரன்களுடனும், விஹாரி 161 பந்துகளைச் சந்தித்து 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

போட்டிக்குப் பின்னர் பேசிய அஸ்வின் ‘புஜாரா மற்றும் பண்ட்டின் விக்கெட்டுக்கு பின்னர் விஹாரி காயமடைந்தார். அதனால் போட்டியை வெல்வது எளிதல்ல என்பதை தெரிந்துகொண்டேன். விஹாரி தன்னை நினைத்து பெருமைப் படக் கூடிய ஒரு இன்னிங்ஸை விளையாடியுள்ளார். அவரின் ஒவ்வொரு ஷாட்டும் சதத்துக்கு நிகரானது. வலைப்பயிற்சியில் நான் தொடர்ந்து பேட்டிங் செய்தது அளித்த நம்பிக்கையில் விஹாரியுடன் என்னால் ஆடமுடிந்தது. ’ எனக் கூறியுள்ளார். அஸ்வினின் மனைவி கடுமையான முதுகுவலியோடு அஸ்வின் விளையாடியதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராத் கோஹ்லிக்கு பெண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!