Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் டிக்கெட் விற்பனையிலும் முறைகேடு.. சிஎஸ்கே நிர்வாகம் மீது வழக்கு..!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (17:05 IST)
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு கவுண்டர்களில் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் பிளே ஆப் போட்டிகளுக்கு மட்டும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் ஆன்லைனில் விற்பனை தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று திர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை விவரங்களை தாக்கல் செய்யக்கோரி அசோக் சக்கரவர்த்தி என்பவர் சென்னை நகர உரிமை இயல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். 
 
ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பெரும்பாலான டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் விற்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் விற்பனை குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்க முட்டையிடும் வாத்தை கொன்னுடாதீங்க! - பும்ரா குறித்து முகமது கைஃப் கவலை!

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments