Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கத்தரி வெயிலின் மிக அதிகமான தாக்கம் எப்போது இருக்கும்....?

Katiri Veyil
, புதன், 4 மே 2022 (09:47 IST)
கத்தரி தீவிரமடையும் நாள்கள்: மே  4 முதல் 10 தேதி வரை சூரியபகவான் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.


பிறகு அக்னி நட்சத்திரத்தின் இறுதிப் பகுதியான ரோகிணி நட்சத்திரத்தில் 25 -28 தேதி வரை சஞ்சரிக்கிறார். இதில் இடைப்பட்ட மே 11 முதல் 24 -ம் தேதிவரை கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். காரணம் கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியனின் சொந்த நட்சத்திரம். யாரும் சொந்த வீட்டில் இருக்கும்போது அதிக பலத்தோடு விளங்குவது இயல்பு.

இந்த நாள்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பம் அதிகரிக்கும்போது இயல்பாகவே மனித சக்தி அதிகமாகச் செலவாகும். எனவே, உடல் உழைப்பை அதிகம் கோரும் சில செயல்களை நம் முன்னோர்கள் இந்த நாள்களில் செய்வதைத் தடை செய்தனர்.

குறிப்பாகக் கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, விதை விதைப்பது, மரம் வெட்டுவது, குழந்தைகளுக்குக் காதுகுத்தி மொட்டை போடுவது ஆகியனவற்றைக் கட்டாயம் செய்யக் கூடாது என்று வகுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்களை தவிர்ப்பது ஏன்...?