Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்சய திரிதியை நாளை கொண்டாடுவதற்கான காரணம் என்ன...?

Advertiesment
Akshaya Tritiya
, செவ்வாய், 3 மே 2022 (09:43 IST)
ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள். அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு அன்னபூர்னேஷ்வரி மாளிகைக்கு வந்து, "தாயே பசி என்றார்.


அதை செவிக்கொண்டு அன்னபூரணி தேவி, இலையிட்டு தன்னால் இயன்ற வஸ்துக்கள் அனைத்தையும் பரிமாறினார். சிவ யோகியோ, இன்னும் இன்னும் என்று அனைத்தையும் உட்கொண்டே இருந்தார்.

வஸ்துக்கள் அனைத்தும் பூர்த்தியாக, அன்னபூரணி தேவிக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே, காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற, தன்னுடைய அண்ணனாகிய மஹா விஷ்ணுவிடம் பிரார்தித்து அழைத்தார்.

மஹா விஷ்ணுவாகிய பிந்து மாதவன், ஒரு அந்தணர் கோலத்தில் வந்தார். அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றால், அங்கு  அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது.

அன்னபூரணி தேவி நடந்த விஷயங்களை கூற, அதை கேட்ட மஹா விஷ்ணு, சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை, அக்ஷயம் என்று சொல்லிக்கொண்டு அவர்தம் தன் திருவாயால் உட்கொண்டார்.

உடனடியாக, சங்கல்ப மாத்திரத்தால் அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின. அன்னபூரணி தேவி அந்த சிவ யோகிக்கு அருகில் இலையிட்டு மஹா விஷ்ணுவை அமர்த்தினார்.

மஹா விஷ்ணுவோ, உட்கார்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார். தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தினால், சிவ யோகியும் தமக்கு திருப்தி என்று எழுந்து விட்டார்.

அன்னபூரணி தேவி அந்த சிவ யோகியை வணங்க, சிவயோகி சிவனாகவே காட்சியளித்தார். "உமைக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே தாம் இங்கு வந்தோம்", என கூறினார். உடனே, மஹா விஷ்ணு,"இன்றைய தினம் எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும்", என்று ஆசிர்வதித்தார். அன்று முதல் சித்தரை மாதம், சுக்ல பக்ஷ திரிதியை நாம் அக்ஷய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருத்திகையில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!