Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முக்கிய விநாயகர் திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்களும் சிறப்புக்களும் !!

Advertiesment
முக்கிய விநாயகர் திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்களும் சிறப்புக்களும் !!
மயிலாடுதுறை - திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்.

ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழி பட்ட பிறகே கோயிலுக்குள் செல்லவேண்டும் என்பது மரபு.
 
மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள்கிறார் பஞ்ச விருட்ச கணபதி. பஞ்ச விருட்சத்தின் அடியில், முனிவ ர்கள் அருவமாக தவம் செய்வதாக ஐதீகம்.
 
தாமரை மலரில் அமர்ந்த நிலையில் வழக்கத் துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தரு கிறார் திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் கேரளபுரம் மகாதே வர் கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனு ம், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனிய ராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.
 
சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை, ‘வலஞ்சை விநாயகர்’ என்கின்றனர்.
 
நவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகரை, வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யா ண மண்டபத்தில் தரிசிக்கலாம்.
 
அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ் திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து மூன்று பிறைகளை தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!