தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மயிலாடுதுறை பாஜகவினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் சதிர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஒன்றிய அரசும் மக்களை வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட சொல்லி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் தமிழக பாஜகவினர் இதை அரசியல் ரீதியாகக் கையில் எடுத்து திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த பாஜகவினர் தபால் நிலையம் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 1001 தபால் அட்டைகளில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.