Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் எந்த இடத்தில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது தெரியுமா...?

Webdunia
விநாயக சதுர்த்தி பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயக சதுர்த்தி நாளில் விநாயகரை நம் வீட்டில் எத்திசையில் வைக்க வேண்டும்  தெரியுமா?

விநாயகரின் தும்பிக்கை எப்போதுமே இடது பக்கமாக தன் தாயான கௌரியை பார்த்த வண்ணம் விநாயகரை வைக்க வேண்டும். இந்நாளில் விநாயகருடன் சேர்த்து  கௌரியையும் பலரும் வைப்பார்கள். விநாயகரின் தும்பிக்கை கௌரி தேவியை நோக்கி இடது பக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
 
விநாயகரின் சிலையை பின்புறம் வீட்டில் உள்ள எந்த ஒரு அறையையும் பார்த்தவாறு இருக்க கூடாது. விநாயகர், வளமையை தரும் கடவுளாகும். அவரின்  பின்புறம் வறுமையை குறிக்கும். அதனால் தான் அவரின் பின்புறம் வீட்டிற்கு வெளிப்பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
 
தென்புற திசையில் விநாயகர் சிலையை வைக்க கூடாது. வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசைகளில் தான் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். உங்கள் வீட்டின் பூஜை அறையும் கூட தெற்கு திசையில் இருக்க கூடாது.
 
கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவற்றை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்க கூடாது. விநாயகர் சிலை உலோகத்தில் செய்திருந்தால், வட கிழக்கு  அல்லது தென் மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
 
மாடிப்படி இருக்கும் வீட்டில், கண்டிப்பாக மாடிப்படிக்கு அடியில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. இது உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
 
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments