Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பசுவின் உடலில் எந்தெந்த தெய்வங்கள் உள்ளனர் தெரியுமா...?

Advertiesment
பசுவின் உடலில் எந்தெந்த தெய்வங்கள் உள்ளனர் தெரியுமா...?
பசுக்கள் இருக்கும் இடம் அருள் சூழும் இடம் என்பதாகும். பசுக்கள் இருக்கும் இடம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக் கும் இடம் என்பதால்தான். பசு உடலின் பல்வேறு  பாகங்களில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.
 

பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார். ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். அப்போது பசு லட்சுமி தேவியிடம், நீ சஞ்சல குணம் உள்ளவள். 
 
எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது. கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது என்று சொன்னது. லட்சுமி தேவியும்,  அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
 
லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
 
தலை - சிவபெருமான்
நெற்றி - சிவசக்தி
வலது கொம்பு - கங்கை
இடது கொம்பு - யமுனை
கொம்பின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள், சராசரி உயிர் வர்க்கங்கள்
கொம்பின் அடியில் - பிரம்மா, திருமால்
மூக்கின் நுனி - முருகன்
மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள்
இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
இரு கண்கள் - சூரியன், சந்திரன்
வாய் - சர்ப்பசுரர்கள்
பற்கள் - வாயுதேவன்
நாக்கு - வருணதேவன்
நெஞ்சு மத்திய பாகம் - கலைமகள்
கழுத்து - இந்திரன்
மணித்தலம் - எமன்
உதடு - உதயாத்தமன சந்தி தேவதைகள் கொண்டை - பன்னிரு சூரியர்கள்
மார்பு - சாத்திய தேவர்கள்
வயிறு - பூமி தேவி
கால்கள் - அனிலன் என்னும் வாயுதேவன்
முழந்தாள் - மருத்து தேவர்
குளம்பு - தேவர்கள்
குளம்பின் நுனி - நாகர்கள்
குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள்
குளம்பின் மேல் பகுதி - அரம்பையர்
முதுகு - உருத்திரர்
யோனி - சந்த மாதர் (ஏழு மாதர்)
குதம் - லட்சுமி
முன் கால் - பிரம்மா
பின் கால் - உருத்திரன், தன் பரிவாரங்களுடன்
பால் மடி - ஏழு சமுத்திரங்கள்
சந்திகள் தோறும் - அஷ்டவசுக்கள்
அரைப் பரப்பில் - பிதிர் தேவதை
வால் முடி - ஆத்திகள்
உரோமம் - மகா முனிவர்கள்
எல்லா அங்கங்கள் - கற்புடைய மங்கையர்
மூத்திரம் - ஆகாய கங்கை
சாணம் - யமுனை
சடதாக்கினி - காருக பத்தியம்
இதயம் - ஆகவணியம்
முகம் - தட்சரைக்கினியம்
எலும்பு, சுக்கிலம் - யாகத்தொழில் முழுவதும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவில்களில் தரப்படும் பிரசாதங்களை எவ்வாறு வாங்கவேண்டும்....?