Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாம்பிராணியில் என்னென்ன பொருட்களை கொண்டு தூபமிடுவது நல்லது தெரியுமா...?

Advertiesment
சாம்பிராணியில் என்னென்ன பொருட்களை கொண்டு தூபமிடுவது நல்லது தெரியுமா...?
சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. வீட்டில் சாம்பிராணி போடுவதால்  வீட்டில் உள்ள கெட்ட சக்திகளின் ஆதிக்கம் குறைந்து தெய்வ கடாட்சம் நிறைந்து காணப்படும்.

சாம்பிராணி தினமும் போட முடியவில்லை என்றாலும் வாரத்தில் இரண்டு முறை அதாவது செவ்வாய்,வெள்ளி போன்ற மங்கள நாட்களில் சாம்பிராணி போடுவதின் மூலம் மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
 
வீட்டில் நிம்மதியின்மை, தூக்கமின்மை,கடன் தொல்லை,கணவன் மனைவி பிரச்சனைகள்,கண் திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் தீர்வாகிறது  சாம்பிராணி தூப பொருட்கள்.
 
சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகரான ஒன்றாகும். ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின்  மூலம் கிடைத்து விடும்.
 
சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும். சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.
 
சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும். சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை  போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
 
சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும். சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவலிங்க வழிபாட்டின் சிறப்புக்களும் பலன்களும் !!