Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவலிங்க வழிபாட்டின் சிறப்புக்களும் பலன்களும் !!

Advertiesment
சிவலிங்க வழிபாட்டின் சிறப்புக்களும் பலன்களும் !!
சிவனையும் அவன் சக்தியையும் சேர்த்து வணங்குவதே சிவலிங்க வழிபாடு. கீழுள்ள ஆவுடை, சக்தி வடிவம். மேலுள்ள லிங்கம், சிவ வடிவம். சிவமும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க வடிவம்.

சிவலிங்கத்தை வழிபட்டால், அது சிவனையும் சக்தியையும் இணைத்து வழிபட்டாதாகப் பொருள். அம்மனை தனித்து வழிபடும் வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டுள்ளது. சிவமூர்த்தங்கள் இருபத்தைந்தும் சிவலிங்கத் திருமேனியில் இருந்தே தோன்றுகின்றன. முடிவில் அவை அனைத்தும் அதனுள் ஒடுங்குகின்றன.
 
அமைதியின் உருவமே சிவ லிங்கம். அனைவரின் துயர் தீர்ப்பதும் சிவ லிங்கமே. சிவலிங்க வழிபாடு ஜீவனை நல்வழிப்படுத்தி முக்தி அளிக்கும்.
 
கலியுக அழிவுகளிலிருந்து லிங்கத்தின் மகிமை அறிந்தவன் விடுவிக்கப்படுவான். லிங்கத்தை வழிபடுபவன் தங்கத்துக்கும் அடிமையாகான்.
 
பலத்தைவிட பாவத்திற்கு சக்தி அதிகம். பாவங்களின் பலிபீடம் சிவ லிங்கம். சிவ லிங்கத்தை மிஞ்சிய தெய்வம் இவ்வுலகில் இல்லை.
 
சிவலிங்க வழிபாடு உலக உண்மையை உணரத்தும். மனித உணர்வுகளிலிருந்து விடுபடுவதற்கான வழி சிவலிங்க வழிபாடாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் அருளை பெறமுடியுமா...?