Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்திரை மாத ராசிபலன்கள் 2023! – மகரம்!

Advertiesment
Monthly Astro Image
, வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (20:26 IST)
சனி பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அனைத்து துறைகளிலும் அறிவு செறிந்திருக்கும்.

இந்த ஆண்டு எதையும் நிதானமாக பலமுறை யோசித்து செய்து வெற்றி பெறும் உங்களுக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை சிந்தித்து செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ராசியில் இருக்கும் புத்திகாரகன் புதனால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

அரசியல் துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.
மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங் களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்திரை மாத ராசிபலன்கள் 2023! – தனுசு!