Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்திரை மாத ராசிபலன்கள் 2023! – தனுசு!

Advertiesment
Monthly Astro Image
, வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (20:22 IST)
குரு பகவான் அம்சத்தில் பிறந்த நீங்கள் எடுத்த முடிவில் மாறாத கொள்கை கொண்டவர்கள்.

இந்த ஆண்டு எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியும். காரிய தாமதம் உண்டாகலாம். ஆனால் அதை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். வாகன யோகத்தை தரும். பெரியோர்களின் உதவி கிடைக்கும்.  மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். காரியங்களும் முயற்சிகளும் தங்குதடையின்றி நடைபெறும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கலாம். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.  மனதில் தைரியம் பிறக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.  மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்தி தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்  எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள்.

அரசியலில் உள்ளவர்கள் பணவரவு காண்பார்கள். ஆனால் பதவி கிடைப்பதில் தாமதம் ஆகும். சுயநலம் விடுத்து பொதுநலம் கருதி பாடுபடவும். வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். எனினும் உங்களின் மனோ பலத்தால் அனைத்தையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்:  விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க  காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்திரை மாத ராசிபலன்கள் 2023! – விருச்சிகம்!