Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துர்க்கையை வழிபட சிறந்த செவ்வாய்க்கிழமை ராகு கால வழிபாடு!!

துர்க்கையை வழிபட சிறந்த செவ்வாய்க்கிழமை ராகு கால வழிபாடு!!
ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. மூன்றே முக்கால் நாழிகை என்பதை ஒரு முகூர்த்த காலம் என்பார்கள். ஒரு  நாழிகைக்கு சர்வதேச கால அலகையால் இருபத்து நான்கு நிமிடங்கள். ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள். ஆகவே  மூன்றேமுக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணி நேரமாகும்.
ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. 'ராகு கால துர்க்கா பூஜை' என்று ஒரு தனி வழிபாட்டு முறையே இருக்கிறது. இதில் மிகவும் விசேடமாகக் கருதப்படுவது செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. இதற்குரிய தெய்வம் (துர்கா  தேவி) 'மங்கல சண்டிகா'.
 
செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் இடையூறுகள் இருந்தால் செய்யப்படும் பூஜை இந்தப் பூஜை. அதுமட்டுமல்லாது நீண்ட நாட்களாகத்  தடங்கலாக இருந்த காரியங்கள் தொடர்ந்து வில்லங்கமில்லாமல் நடப்பதற்காகவும் செய்யப்படுவது. பெண்களுக்குத் திருமணமாவதற்காகவும்  இதனைச் செய்வார்கள். இதற்கென பூஜை முறைகள் இருக்கிறது.
webdunia
ஒன்பது வாரங்களுக்கு விரதமிருந்து செய்யப்படுவது இந்தப் பூஜை. எலுமிச்சம்பழத்தை அறுத்து, சாற்றைப் பிழிந்துவிட்டு, அந்த மூடியைப்  திருப்பிப்போட்டு, அதில் நெய்யை ஊற்றி, சிறிய திரியைப்போட்டு, தீபம் வைத்து வழிபடுவது வழக்கம். அப்போது துர்கை வழிபாட்டு மந்திரப்  பாடலைப் படிப்பார்கள்.
 
செவ்வாய்க்கும் ராகுவுக்கும் கிரகப் பதவி கிடைப்பதற்காக அவர்கள் சண்டிகையை வழிபட்டார்கள் என்ற ஐதீகம். முறையே அவர்களுக்குரிய  நாள், நேரம் ஆகியவற்றில் இந்தப் பூஜையைச் செய்தால் காரிய சித்தியும் சண்டிகையின் பேரருளும் கிட்டும் என்ற வரத்தையும் அவ்விருவரும் சண்டிகையிடம் பெற்றார்கள் என்று தேவீ பாகவதம் கூறுகிறது. ஆகவேதான் செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்றவற்றிற்கும் இந்தப்  பூஜையை உரிய விரதமிருந்து செய்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாயகர் பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொள்வோம்...!!