Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறைகள் என்ன...?

விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறைகள் என்ன...?
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே பெண்கள் எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி, பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து அதன்மேல் தலை வாழையிலையை அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும்.

அரிசியின் மேல் நம் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன் கீழ் ஓம் என எழுத வேண்டும்.
 
மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக  வைக்க வேண்டும். நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை  அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். 
 
குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.  கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பழங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு.  இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (26-08-2019)!