Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

Advertiesment
வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (15:22 IST)
வியாழ பகவான் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவார். கமண்டலம், அட்சமாலை, யோக தண்டத்தை தாங்கி, அபய முத்திரையுடன் அருள்புரிவார். இவருக்கு பிடித்த உலோகம் தங்கம்.


ஜாதக ரீதியான பல்வேறு தோஷ அமைப்புகளை ஏற்படுத்தும் கிரகங்கள், ராசிகள், கிரகக்கூட்டணிகள், அசுப ஸ்தானங்கள் ஆகியவற்றை தமது பார்வை பலத்தால் நன்மை செய்துவிடுவார்.

யானையை வாகனமாக கொண்ட இவருக்கு, பிடித்த உணவு கொண்டைக் கடலை தானியம். இதனால்தான் வியாழ பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள்.

நவரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிந்திருப்பவர். அரச மரம் இவருக்கு பிடித்த மான மரம். இனிப்பு சுவை பிடிக்கும். நான்கு சக்க ரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பார். ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் இவர் அதிபதி என்பதை எடுத்துக் காட்டும் அடையாளம்.

நீதி சாஸ்திரங்களை அறிந்த குரு பகவான் ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்க லாம் என்பதை நிர்ணயம் செய்வார்.

தன்னை வழிபடுபவர்க ளுக்கு, உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை அருள்பவர் குரு பகவான். அதோடு, கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு இவரை வேண்டினால் தீர்வு கிடைக்கும். வியாழக்கிழமை விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய வஸ்திரம் சாத்தி, தானியம் வைத்து வழிபட்டால் நன்மைகள் நம்மை நாடி வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாய் பாபாவின் பொன்மொழிகள்!!