Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் கடவுள் முருகனுக்கு விசேஷமான நாட்கள் எவை தெரியுமா...?

Advertiesment
தமிழ் கடவுள் முருகனுக்கு விசேஷமான நாட்கள் எவை தெரியுமா...?
, புதன், 9 பிப்ரவரி 2022 (18:39 IST)
தமிழ்க்கடவுள் முருகனுக்கு விசேஷமான நாட்கள் வருடம் முழுதும் பல உள்ளன. சொல்லப்போனால், ஒவ்வொரு நாளும் அழகன் முருகனுக்கு உகந்த நாள்தான்.


ஆனால் சில நாட்களில் முருகனை மனம் முழுக்க நிரப்பி, விரதம் இருந்து மனமுருக வேண்டினால், அன்று நம் பிரார்த்தனைக ளுக்கு கார்த்திகேயன் கண்டிப்பாக செவி மடுப்பான் என்பது நிச்சயம். அப்படிப்பட்ட புனித நாட்களில் ஒன்றுதான் தை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் தை கிருத்திகை திருநாளாகும்.

முருக பக்தர்களுக்கு தை கிருத்திகை மிகவும் உகந்த நாளாகும். உலகுக்கே அம்மையப்பனான சிவபெருமானுக்கும் உமையாளுக்கும் அன்பு மகனாகப் பிறந்த முருகரை ஆறு கார்த்திகைப் பெண்கள் அன்போடும் பாசத்தோடும் கவனித்துக் கொண்டனர்.

அவர்கள் முருகன் மீது கொண்ட பாசத்திற்கும் அன்புக்கும் பரிசாக அவர்களுக்கு சிவபெருமான் நட்சத்திர நிலையை வழங்கினார். கிருத்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும், ஆடி கிருத்திகை மற்றும் தை கிருத்திகைக்கு சிறப்பம்சம் உண்டு.

கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இரு ந்து முருகனை வழிபட்டால் அவர்களுக்கு கல்வி, ஆயுள், நல்ல மனைவி, நன்மக்கட் பேறு, நிம்மதியான வாழ்வு ஆகிய எல்லாம் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருக பெருமான் கார்த்திகேயன் என்ற பெயரில் அழைக்கப்படுவது ஏன் தெரியுமா...!!