Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

பீஷ்மாஷ்டமி அன்று செய்யப்படும் தர்ப்பணத்தின் பலன்கள் !!

Advertiesment
சூரிய பகவான்
, செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (14:55 IST)
18 நாட்கள் நடைபெற்ற குருசேத்திரப் போரில் 10-ம் நாளில், அம்புகள் துளைக்க போர்க்களத்தில், அம்பு படுக்கையில் கிடந்தார், பீஷ்மர்.


உத்திராயன புண்ணிய காலம் தொடங்கும்போது மரணிக்க வேண்டும் என்று காத்திருந்தார். தை மாதம் தொடங்கியும் கூட அவருக்கு மரணம் நேரவில்லை. உடலில் வலியும், வேதனையும் அதிகரித்தது.

உபாயம் சொன்ன வியாசர், பீஷ்மா.. உன்னுடைய பாவங்களை பொசுக்கும் ஆற்றல் சூரியனுக்கே உண்டு. சூரியனுக்கு உகந்தது எருக்கம் இலை. அதற்கு ‘அர்க்கபத்ரம்’ என்று பெயர். ‘அர்க்கம்’ என்பதற்கு ‘சூரியன்’ என்றும் பொருள் உண்டு. அந்த இலைகளைக் கொண்டு உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப்போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும் என்று கூறிய வியாசர், அதன்படியே செய்தார்.

இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி அடைந்த பீஷ்மர், உடலில் இருந்து வேதனைகள் அகன்று, தியானத்தில் ஆழ்ந்து ரதசப்தமிக்கு அடுத்த நாளில் முக்தியை அடைந்தார். அந்த தினம் ‘பீஷ்மாஷ்டமி’ என்று அழைக்கப்படுகிறது.

பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார் என்று வருந்தினான், யுதிஷ்டிரன். அதுபற்றி வியாசரிடம் கேட்கவும் செய்தான். அதற்கு வியாசர், தா்மா.. ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும் பித்ரு கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர், சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த பாரத தேசமே பித்ரு கடன் செய்யும், அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர் என்றார்.

அதன்படி பீஷ்மாஷ்டமி அன்று, நீர்நிலைகளுக்குச் சென்று, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் தர்ப்பணங்கள் அனைத்தும், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியோடு, பீஷ்மரின் வாழ்த்தும் கிடைத்து, சுகமான வாழ்வை அனைவரும் பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரிய பகவான் பற்றிய சிறப்புக்களை தெரிந்துக்கொள்வோம் !!