Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரியனின் பிறப்பு பற்றி கூறப்படும் புராணக்கதை என்ன தெரியுமா...?

சூரியனின் பிறப்பு பற்றி கூறப்படும் புராணக்கதை என்ன தெரியுமா...?
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (11:37 IST)
ரத சப்தமி அன்றுதான் சூரியன் வட திசையில் இருந்து ஆறு மாத காலத்திற்கு உலகிற்கு ஒளி தருவார். ரத சப்தமி நாளையொட்டி கங்கை உள்ளிட்ட புண்ணிய ஆறுகள், தீர்த்தங்களில் ஏராளமானோர் புனித நீராடி சூரியபகவானை வழிபடுவார்கள்.


இன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன.

பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுப்படுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன்.

சூரியன் தோன்றிய வரலாற்றை புராணங்கள் தெரிவிக்கின்றன. காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் அந்தணர் ஒருவர் வந்து உணவு கேட்டார். கணவருக்கும் பரிமாறிய பின்னர் நிறைமாத கர்ப்பம் என்பதால் மிக மெதுவாக நடந்து வந்த அதிதி அந்தணருக்கு உணவு அளித்தாள். இதனால் கோபம் கொண்ட அந்தணர், கர்ப்பத் தைப் பாதுகாப்பதற்காக மெதுவாக நடந்து வந்ததால் அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபம் இட்டார். அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி தன் கணவரிடம் நடந்தவற்றை விளக்கினாள்.

இதைக்கேட்ட  முனிவர், அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் பிறப்பான் என்று வாக்களித்தார். அதன் படி ஒளி பொருந்தியவனாக உலகை காக்கும் சூரியன் பிறந்தான்.

உலகை பாதுகாக்கும் பொருட்டு நவக்கிரக குழு அமைக்கப்பட்டு, சூரியனுக்குத் தலைமைப் பதவி தரப்பட்டது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரமுள்ள ரதத்தில் சூரியன் மேரு மலையைச் சுற்றி வலம் வருகின்றார். அவருக்குச் சாரதி அருணன் ஆவான். சூரியனுக்கு சமுங்கை, பிரபை, ரைவத இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரத சப்தமி நாளில் கடைப்பிடிக்கவேண்டிய விரத முறைகள் !!