Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்கள் மெட்டி அணிந்து கொள்வதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா...?

Advertiesment
பெண்கள் மெட்டி அணிந்து கொள்வதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா...?
திருமணத்தில் பல்வேறு சடங்குகளும், சம்பிரதாயங்களும் பின்பற்றப்படுகின்றன. அவை அனைத்தும் பெயருக்கு சடங்குகளாக தோன்றினாலும், அறிவியல் மற்றும் உளவியல் ரீதியாக நமக்கு போதனைகளை தருவதாக இருக்கிறது. 

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும், கால்விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால்விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.
 
பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடுவிரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்பதால் திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படுகிறது. மேலும் பெண்களின் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில்தான் கருப்பையின்  நரம்பு நுனிகள் வந்து முடிவதால், மெட்டி அணிந்து நடக்கும்போது நரம்பு நுனி அழுத்தப்படுவதாலும் கருப்பை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
 
பெண்கள் கர்ப்பம் அடையும்போது மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்கமுடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். வெள்ளியில் செய்த  மெட்டியை அணிவதால் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை சரி செய்யும்.

webdunia
வெள்ளி ஒரு நல்ல கடத்தி என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது. குழந்தை  பிறந்தவுடன் 3-வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
 
பெண்கள் மெட்டியை அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் இருக்கிறது. இதனால், காலத்தே நல்ல மக்கட்பேற்றோடு தம்பதியினர் சீரும் சிறப்புமாக வாழலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பிகையின் 10 வித தோற்றங்களும் பெயர்களும் பற்றி தெரிந்து கொள்வோம்...!!