நிகழும் கர வருடம் சித்திரை மாதம் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை(8/9.5.2011) சுக்ல பட்சத்து சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம் சூலம் நாமயோகம் தைத்துலம் நாமகரணம் நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில் குரு ஹோரையில் சூரியம் உதயம் புக பெயர்ச்சி நாழிகை 48க்கு சரியான நேரம் பின்னிரவு மணி 1.12க்கு உபயவீடான மீனத்திலிருந்து சர வீடான மேஷத்திற்குள் குருபகவான் நுழைகிறார்.
வேத மந்திரங்களுக்கும், மகான்களுக்கும், மெய் ஞானத்திற்கும், விஞ்ஞானத்திற்கும், உபநிடதங்களுக்கும் உரிய கிரகமான குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை மேஷ ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார். இந்த குருப் பெயர்ச்சி ராசி பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் தொகுத்து அளித்துள்ளார். அவை வருமாறு: