Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நர‌சி‌க்வாடியின் தத்தா‌த்ரேயா கோயில்

Advertiesment
நர‌சி‌க்வாடியின் தத்தா‌த்ரேயா கோயில்
, திங்கள், 13 ஏப்ரல் 2009 (17:24 IST)
இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள நரசி‌க்வாடி என்ற கிராமத்தில் உள்ள தத்தாத்ரேயா கோயிலுக்கு அழைத்துச் செல்லப் போகிறோம்.

மஹாராஷ்டிர மாநிலம் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ளது இந்த கோயில். நர்சோபாவாடி என்றும் இந்த இடம் அழைக்கப்படுகிறது.

தத்தாத்ரேயா இங்கு 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார். அதனால் இப்பகுதியை தத்தா மஹாராஜாவின் தவபூமி என்றும் அழைக்கின்றனர்.

இங்குள்ள தத்தாத்ரேயாவின் பாதசுவடுகளை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர். புராணங்களில் கூறப்பட்டுள்ளபடி, தத்தா மஹாராஜா தனது ஆட்சியை முடித்துக் கொண்டு பயணத்தைத் துவக்கிய பின்னர் அடும்பர், கனகாபுர், கார்டலிவன் பகுதிகளுக்குச் சென்று இறுதியாக நரசி‌க்சரஸ்வதியில் உடலை துறந்தார்.

இந்த கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தத்தாத்ரேயாவின் தர்பாரைப் பார்த்துச் செல்கின்றனர்.

webdunia photoWD
இந்த பகுதியில்தான் கிருஷ்ணா நதி பஞ்சகங்கா நதியுடன் கூடுகிறது. இப்பகுதியில், கோயிலில் ஓதும் மந்தரமும், அடிக்கும் மணியோசையும், நதியின் சலசலப்பும் கலந்து ஒரு இசையாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இந்த கோயில் முழுவதும் இறை தன்மை நிரம்பி இருப்பதாக அங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், கோயிலின் கட்டட அமைப்பு மசூதியை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இந்த கோயிலுக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்து தத்தாத்ரேயாவை வழிபடுகின்றனர்.

பெளர்ணமி நாட்களில் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தருகின்றனர். சனிக்கிழமையில்தான் தத்தாத்ரேயா பிறந்தார் என்ற நம்பிக்கை நிலவுவதால், வாரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகமான பக்தர்கள் வந்து தத்தாத்ரேயாவின் பாதச்சுவடுகளை வணங்கிச் செல்கின்றனர்.

தத்தா ஜெயந்தி என்ற விழா என்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலுக்குள் நாய்கள் செல்ல யாரும் தடை விதிப்பதில்லை. ஏனெனில் நாய் உருவில் கூட தத்தாத்ரேயா அவதாரம் எடுப்பார் என்ற நம்பிக்கையே காரணமாகும்.

webdunia
webdunia photoWD
எனவே கோயிலுக்குள் அதிகமான நாய்களைக் காண முடிந்தது. சிலர் நாய்களை வணங்கியும், அவைகளுக்கு உணவுகள் வழங்குவதையும் காண முடிந்தது.

எப்படி செல்வது

சாலை மார்கம் - கோல்ஹாப்பூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் நர்சிக்வாடி உள்ளது. புனேயில் இருந்தும் பேருந்தில் நர்சிக்வாடி செல்லலாம்.

ரயில் மார்கம் - மும்பை அல்லது புனேயில் இருந்து ரயில் மூலம் கோல்ஹாப்பூர் செல்லலாம்.

விமான மார்கம் - கோல்ஹாப்பூர் விமான நிலையம் அருகில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil