இந்த கோயில் மகாபாரத காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த கோயிலில் உள்ள திருவுருவச் சிலை சத்யுக காலத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த கோயில் எப்போது கட்டப்பட்டது என்பது பற்றிய சரியான தகவல் எங்கும் இல்லை. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். அவர்களுக்கும் இந்த கோயிலின் வரலாறு தெரிந்திருக்கவில்லை.மன்னன் ஹர்ஷவர்தன் காலத்தில் இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதன் பிறகு நெடுங்காலத்திற்குப் பின்னர் குவாலியரின் மன்னரால் இந்த கோயில் திருப்பணிகள் நடந்துள்ளன.
இந்த கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. அதில் நவராத்திரி விழா தான் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
எப்படிச் செல்வது?
விமான மார்க்கம் - இந்தூர் விமான நிலையத்தில் இருந்து 65 கி.மீ. தூரத்தில் உஜ்ஜைன் அமைந்துள்ளது.
ரயில் மார்கம் - முக்கியமான ரயில் நிலையங்களில் இருந்து உஜ்ஜைனுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சாலை மார்கம் - இந்தோரில் இருந்து 55 கி.மீ. தூரத்திலும், போபாலில் இருந்து 180 கி.மீ. தூரத்திலும் உஜ்ஜைன் அமைந்துள்ளது.