இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான துறவிகளின் வசிப்பிடங்களும் கல்லறைகளும் உள்ளன. இவைகள் அனைத்தும் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானவை என்று தெரிய வந்துள்ளது.ஹனுமன் கோயில் வளாகத்திற்குள் ஆலமரம், வேம்பு, பாரிஜாதம், துளசி உள்ளிட்ட தாவரங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு பாரிஜாத மரங்கள் மிகவும் பழமையானவை. இந்த மரங்களில் ஹனுமன் குடியிருப்பதாக கதைகள் கூறுகின்றன. இவற்றில் ஏராளமான கிளிகளும் உள்ளன.
பிரம்மா ஒருமுறை கிளியின் உடலில் கூடு பாய்ந்ததாகவும், ஹனுமன் அந்தக் கிளியின் மூலம், ராமனைச் சந்திக்க துளசிதாசிற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் கதைகள் கூறுகின்றன.
கோயில் வளாகத்திற்குள் ராமன், சீதை, லட்சுமணன், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரின் சிலைகளும் உள்ளன.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஹனுமனுக்கு ஆரஞ்சு நிறம் பூசப்படுகிறது. ஹனுமனை மூன்று அல்லது நான்கு வாரங்கள் தரிசிப்பதன் மூலம் தங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்று மக்கள் நம்புகின்றனர். பக்தர்களை உல்டா கோவிலை நோக்கி ஹனுமன் ஈர்ப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.
எப்படி அடைவது:
சாலை மார்க்கம்: உஜ்ஜைனியில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், இந்தூரில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் உள்ள இக்கோவிலிற்கு பேருந்து அல்லது கார் மூலம் சாலை மார்க்கமாகச் செல்லலாம்.
விமான மார்க்கம்: உல்டா ஹனுமன் கோவிலிற்கு அருகில் உள்ள விமான நிலையம் இந்தூர் (30 கி.மீ.)