அருகே மொஹாதே என்ற இடத்தில் உள்ளது ஸ்ரீ ஜெகதாம்பா மாதா கோயில். இக்கோயிலில் வந்து மாதாவை வழிபடுபவர்கள் நினைத்து நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.இத்திருக்கோயில் இங்கு வந்ததற்கு ஒரு பக்தரே காரணமாக இருந்துள்ளார். அவர் பெயர் பன்சி தாஹிஃபாலே. இவர் மாஹூர்கார் என்ற இடத்திலுள்ள ரேணுகா மாதாவின் தீவிர பக்தர். நமது நாட்டிலுள்ள சக்தி பீடங்களில் ஒன்றான மாஹூர்காருக்கு அடிக்கடி சென்று வழிபட்டுவந்த பன்சி தாஹிபாலே, தனது கிராமத்திற்கு வருமாறு மாதாவை வேண்ட, அந்த வேண்டுதலை நிறைவேற்ற அவருடைய கனவில் தோன்றிய ரேணுகா மாதா, அக்கிராமத்திற்கு அருகிலுள்ள குன்றின் உச்சில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து வழிபடுமாறு கூற, அவ்விடத்தில்தான் இப்பொழுது நாம் காணும் இக்கோயில் உள்ளது.
மாஹூர்கார் ரேணுகா மாதாவின் மறுவடிவமாக ஸ்ரீ ஜெகதாம்பா மாதா திகழ்கிறார். குரு விரிதேஷ்வர், மச்சேந்திர நாத், கானிஃப் நாத், காஹி நாத் ஜாலிங்கர் நாத், நாக நாத் என்று பல குருக்கள் இத்திருத்தலத்திற்கு வந்து மாதாவை வணங்கியுள்ளனர்.
இத்திருத்தலத்திற்கு அஸ்வினி சுதி ஏகாதசியன்று ஸ்ரீ ஜெகதாம்பா மாதா எழுந்தருளியதால் அந்த நாளில்தான் இங்கு திருவிழா நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜெகதாம்பா மாதா - தான் இருந்த மாஹூர்காரை நோக்கி பார்த்தப்படி உள்ளார்.
இக்கோயிலிற்கு அருகில் ஒரு சிவன் கோயிலுன் உள்ளது. அக்கோயிலை ஒட்டியுள்ள குளத்தில்
நீராடிவிட்டுத்தான் இக்கோயிலிற்கு பக்தர்கள் வருகின்றனர்.ஸ்ரீ ஜெகதாம்பா மாதாவின் கருணையை இங்கு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் பெருமையுடன் கூறுவதைக் கேட்கலாம்.இக்கோயிலிற்கு அருகே அணை ஒன்று கட்டப்படுவதற்காக நடந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தி வந்திருந்தார். மறுநாள் விழா நடைபெறயிருந்த நிலையில் அன்று இரவு அவருடைய கனவில் ஸ்ரீ ஜெகதாம்பா மாதா தோன்ற, மறுநாள் இக்கோயிலிற்கு வந்த இந்திரா காந்தி, குன்றின் மீது பக்தர்கள் சுலபமாக ஏறிச்செல்ல வசதியாக படிகளைக் கட்டுமாறு உத்தரவிட்டுவிட்டுச் சென்றார்.ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சக்கணக்கில் பக்தர்கள் வரும் இக்கோயிலை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறிய இக்கோயிலின் அறங்காவலர் குழுவின் தலைவர் சுரேஷ் பாலசந்திரா, அதற்கு 15 கோடி செலவாகும் என்று கூறினார். இக்கோயிலைச் சுற்றி இருபது ஆயிரம் மூலிகைச் செடிகளும், மற்றத் தாவரங்களும் வளர்க்கப்படுகின்றன.இத்தலத்திற்குச் செல்வது எப்படி:இரயில் மார்கம்: அஹமதுநகர் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இரயில் மூலமாக அடையும்
பாதையில் உள்ளது. சென்னையில் இருந்து செல்வோர் மும்பை மார்கத்தில் பயணித்து பூனாவிற்கு முன் வரும் டோண்ட் (Daund) என்ற இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சிர்டி செல்லும் வழியில் சென்று அஹமத்நகர் செல்லலாம்.அங்கிருந்து மோஹாதே 70 கி.மீ. தூரத்திலுள்ளது.
விமான மார்கம்: பூனா விமான நிலையத்திலிருந்து 180 கி.மீ. தூரத்திலுள்ளது அஹமத்நகர்.
சாலை மார்கம்: இக்கோயில் அமைந்துள்ள மொஹாதே, அஹமத்நகரிலிருந்து 70 கி.மீ. தூரத்திலுள்ளது.