மஹி சாகர் சங்கத்தில் குளித்த பிறகுதான் இறைவன் சந்திரன் (நிலா) தக்ஷ பிரஜாபதியின் சாபத்தில் இருந்து விடுபட்டதாகவும் கூறப்படுகிறது. புராண காலத்தில் லக்ஷ்மண் - ஊர்மிளாவிற்கு பிறந்த சந்திரகேது அடர்ந்த காட்டில் அமாவாசையன்று சிக்கிக் கொண்டு மிகுந்த அச்சத்திற்குள்ளானதாகவும், நவ துர்காவை நினைத்து பூஜித்ததன் பலனாக மா சந்திரிக்காவின் அருள் பெற்று அவனுக்கு பயம் விலகியதாகவும் கூறப்படுகிறது.மகாபாரதத்திலும், பாண்டவர்கள் திரெளபதியுடன் வனவாசம் மேற்கொண்ட போது இப்பகுதிக்கு வந்துள்ளனர் என்றும் புராணம் கூறுகிறது. மேலும் இந்த கோயிலின் பின்னணியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதாவது யுதிஷ்டிரர் மற்றும் ஹன்ஸ்ராஜ் ஆகிய இரண்டு மன்னர்களுக்கு இடையே நடந்த போரில் ஹன்ஸ்ராஜின் இளைய மகன் சுந்தான்வா பங்கேற்கவில்லை. அந்த சமயத்தில் அவன் நவ துர்கா பூஜையில் ஈடுபட்டிருந்தான். அதற்கு அவனை தண்டிக்கும் விதத்தில் கொதிக்கும் எண்ணெய் குளத்தில் அவனை போடும்படி தந்தை தீர்ப்பளித்தார். கொதிக்கும் எண்ணெய் குளத்தில் போட்டும் மா சந்திரிக்காவின் சக்தியால் சுந்தான்வா உயிருடன் மீண்டு வந்தான். இந்த சம்பவத்திற்குப் பிறகு இப்பகுதி சுந்தன்வா குண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் யுதிஷ்டிரர் தனது படைப் பரிவாரங்களுடன் தங்கியிருந்த கடகா தற்போது கடகவாசா என்று அறியப்படுகிறது.இத்திருத்தலத்தில் ஹவன் குண்ட், யாக சாலை, சந்திரிக்கா தேவியின் நீதிமன்றம், பாரிபரிக்
நுழைவாயில், சுந்தர்வா குண்ட், மஹிசாகர் சங்கம் ஆகியன உள்ளன.
இந்திய எழுத்தாளர் மறைந்த அம்ரில் லால் நாகர் என்பவர் கர்வாத் என்ற தனது புத்தகத்தில் கூட இத்தலத்தைப் பற்றி புகழ்ந்துரைத்துள்ளார். அங்கு வாழும் மக்கள், இவ்விடத்தை புராதானச் சின்னமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.