Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்மாவதி தாயார் திருத்தலம் : அலமேல் மங்காபுரம்

Advertiesment
பத்மாவதி தாயார் திருத்தலம் : அலமேல் மங்காபுரம்
webdunia photoWD
திருப்பதி சென்று திருமலையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீவெங்கடாசலபதியை தரிசிக்கும் எவரும் திருச்சானூர் சென்று அங்கு வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரை வணங்காமல் திரும்பக்கூடாது என்று கூறுவார்கள்.

ஏனெனில் திருப்பதியை பாலாஜியை வணங்குவதால் கிடைக்கும் அருள், பத்மாவதி தாயாரை வணங்குவதன் மூலம் நிறைவேறும் என்பது தொன்றுதொட்டு இத்திருத்தலங்களுக்குச் சென்று வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.

திருப்பதி திருமலையில் திருமாள் வீற்றிருக்க, திருப்பதியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோயில் உள்ளது.

தன்னிடம் பிரார்த்திக்கும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி தருபவர் பத்மாவதி தாயார் என்பதால் திருப்பதி திருமலையைப் போலவே இங்கும் பக்தர்களின் வருகை அன்றாடம் பல ஆயிரக்கணக்கில் இருந்து கொண்டே உள்ளது.

தல புராணம் :

webdunia
webdunia photoWD
திருச்சானூரில் வெங்கடாச்சலபதிக்கு ஒரு கோயில் இருந்தது. ஆனால் அந்த கோயில் மிகச் சிறியதாக இருந்ததால் எல்லா பூஜைகளையும் செய்ய முடியவில்லை என்பதற்காக சற்று தூரத்தில் மற்றொரு கோயில் கட்டப்பட்டது. அங்கு மிக முக்கியமான இரண்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அந்தக் கோயிலிலும் போதுமான இட வசதி இல்லை என்று கூறி மீண்டும் விக்ரகங்கள் வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

12வது நூற்றாண்டில் அப்பொழுது இப்பகுதியை ஆண்டு யாதவ அரசர்கள் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோயிலைக் கட்டினர். அந்தக் கோயிலில் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதாவது 16வது, 17வது நூற்றாண்டுகளில் சுந்தரவரதராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

webdunia
webdunia photoWD
அந்த நேரத்தில்தான் பத்மாவதி தாயாருக்கு தற்பொழுதுள்ள இந்தக் கோயில் கட்டப்பட்டது.

புராணத்தின்படி அலமேல் மங்காபுரத்தில் உள்ள இக்கோயிலின் திருக்குளத்தில் உள்ள தாமரையில்தான் பத்மாவதி தாயார் அவதரித்ததாகக் கூறப்படுகிறது.

இத்திருக்கோயிலில் பல கடவுள்களின் சன்னதிகள் உள்ளன. பத்மாவதி தாயார், திருமலை வெங்கடாச்சலபதியின் துணைவியார் என்றே வழங்கப்படுகிறார்.

பத்மாசனத்தில் தனது கைகளில் தாமரை ஏந்தி இருக்கும் பத்மாவதி தாயாரின் திருவுருவம் வணங்குவோரிடையே பக்திப் பெருக்கை ஏற்படுத்துவதாகவும் இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர், பலராமர், சுந்தரராஜ சுவாமி, சூரிய நாராயண சுவாமி ஆகியோரின் விக்ரகங்களும் மிக ஆழகானவை.

இத்திருக்கோயிலுக்கு இணையான சிறப்பைப் பெற்றுள்ளது இங்கு வளர்க்கப்படும் யானை. இந்த யானைதான் பத்மாவதித் தாயாரின் வாகனம். இத்திருக்கோயில் விழாக்களின் போது யானை உருவம் பொறிக்கப்பட்ட கொடியே ஏற்றப்படுகிறது.

ஆன்மீக பூமியான இந்தியாவில் உள்ள ஏராளமான திருத்தலங்களில் முக்கியமானவற்றில் ஒன்று இந்த அலமேல் மங்காபுரம்.

எப்படிச் செல்வது :

ரயில் மார்கமாக : இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் ரயில் மார்கமாக திருப்பதி வர முடியும். திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் திருச்சானூர் உள்ளது.

சாலை மார்கமாக : இத்திருத்தலம் சென்னையில் இருந்து 165 கி.மீ. தொலைவில் உள்ளது.

விமான‌ம் மார்கமாக : சென்னை, பெங்களூர், ஹைதராபாத் இடங்களில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil