ஸ்ரீ ஹர்மந்தீர் சாகிப் அல்லது தர்பார் சாகிப் என்று அழைக்கப்படும் பொற்கோயில் உலகில் உள்ள சிக்கியர்களின் புனித தளமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு ஹரி என்ற பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சிக்கியர்கள் நாள்தோறும் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ ஹர்மந்தீர் சாகிப்பிற்கு வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சீக்கியர்களின் 5வது மத குருவான குரு அர்ஜன் சாகிப் சக்கியர்களுக்கு என்று ஒரு பொதுவான வழிபாட்டு த் தலம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதனை தொடர்ந்து அவருர் வடிவமைத்த கட்டடக்கலை வண்ணத்தில் ஸ்ரீஹர்மந்தீர் சாகிப்பை நிர்மாணிக்க திட்டமிட்டார்.அமிர்தசரஸ்சில் உள்ள அந்த தெப்பகுளத்தை அமைக்க சீக்கியர்களின் 3வது மத குருவான குரு அமர்தாஸ் சாகிப் திட்டமிட்டார். ஆனால், அந்த தெப்பகுளம் சீக்கியர்களின் 4வது மத குருவான குரு ராம்தாஸ் சாகிப் காலத்தில் பாபா புத்தாஜி மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பட்டது.இந்த கோயிலை அமைப்பதற்கான நிலங்கள் முந்தைய சீக்கிய மத குருக்களிடம் நன்கொடையாக, அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நிலசுவான்தார்கள் கொடுத்த பணத்தில் இருந்து வாங்கப்பட்டது. குருராம்தாஸ் சாகிப் தெப்பக்குளத்துடன் (சரோவர்) ஒரு குடியிருப்பு பகுதியையும் அமைக்க திட்டமிட்டார். இதனைத் தொடர்ந்து 1570ஆம் ஆண்டு 2 கட்டடங்களையும் கட்டும் பணிகள் துவங்கின. 1577ஆம் இப்பணிகள் முடிவடைந்தன.
இந்த கோயில் அமைப்பதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணியை 1588ஆம் ஆண்டு லாகூரில் வசித்து வந்த இஸ்லாமிய மார்கத்தை சேர்ந்த அறிஞர் ஹசரத்- மியான் - மிர்- ஜி தொடங்கி வைத்தார். இவர் குரு ஹர்ஜன்சாகிப்புக்கு உற்ற நண்பராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுமான பணிகள் குருஹர்ஜன் சாகிப்பின் நேரடி மேற்பார்வையிலேயே நடைபெற்றது. இப்பணியில் அவருக்கு சீக்கிய முன்னோடிகளான பாபா புத்தாஜி, பாய் குருதாஸ் ஜி, பாய் ஷாலோஜி மற்றும் பல சீக்கிய பக்தர்கள் ஈடுபட்டனர்.
இந்து கோயில்களை அமைக்கும் போது வானளாவ உயர்ந்த கோபுரங்களை கொண்டு அமைப்பது இந்து கோயில் கட்டடக் கலையின் சிறப்பு அம்சமாக விளங்கியது. ஆனால், குருஹர்ஜன் சாகிப் இந்து கோயில்களை போல அல்லாது குறைந்த உயரத்திலேயே கோயிலை நிர்மாணித்தார். இக்கோயிலுக்கு உள்ளே வரவும், வெளியே செல்லவும் ஒரே பாதையை பயன்படுத்தும் வகையில் 4 வாயில்கள் நான்கு புறமும் அமைக்கப்பட்டுள்ள. இந்த 4 வாயில்களும் ஜாதி, இனம், பாலினம் மற்றும் சமய வேறுபாடு இன்றி யார் வேண்டுமானாலும் வந்து செல்லலாம் என்பதை எடுத்துக் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தை கோயிலாக மாற்றும் பணி 1661ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து குரு ஹர்ஜன் சாகிப் குரு கிராந்த் சாகிப்பை அங்கு நிறுவினார். மேலும் பாபா புத்தாஜியை முதல் கிராந்தியாக அதாவது சீக்கியர்களின் புனித நூலை வாசிப்பவராக நியமனம் செய்தார். ஆத் ஷாத் திராத் என்று அழைக்கப்படும் பொற்கோயில் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் திருத்தலமாக விளங்கி வருகிறது.
ஸ்ரீ ஹர்மந்தீர் சாகிப், சரோவரின் (தெப்பக்குளம்) மையப்பகுதியில் 67 அடி பரப்பளவிற்கு அமைக்கப்ட்டுள்ளது. இதில் அமைந்துள்ள கோயில் மட்டும் 40.5 அடி பரப்பளவிற்கு கட்டப்பட்டுள்ளது. நான்கு திசைகளிலும் உள்ள நுழைவு வாயில்கள் மிகுந் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள. பொற்கோயிலுக்கு செல்வதற்கு தெப்பக்குளத்தின் மேல் அமைந்துள்ள பாலத்தின் மூலமாக சென்றால் 2
02 அடி நீளமும், 21 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஹர்மந்தீர் சாகிப்புக்கு செல்ல முடியும்.இந்த பாலம் 13 அடி அகலம் கொண்ட 'பிரதாக்க்ஷனா' என்ற பாதையில் சென்றடையும். இந்த பாதை கோயிலின் முக்கிய பகுதிகளை சுற்றி வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதை ஆண்டவனிடம் அழைத்து செல்லும் படிக்கட்டாக கருதப்படுகிறது. அங்குள்ள முதல் தளத்தில் 'ஹர்- கி- பவுடி- யில் தொடர்ந்து சீக்கியர்களின் புனித நூலான குரு கிராந்த் சாகிப் வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். ஸ்ரீ ஹர்மந்தீர் ஷாகி 3 அடுக்குகளாக அமைந்துள்ளது. முன்பகுதி பாலத்தை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. முதல் தளத்தின் கூரை பகுதியின் உயரம் 26.9 அடியாகும். மேற்பகுதி பல்வேறு கலை வண்ணத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தின் மேல் பகுதியில் 4 அடி உயர்த்திற்கு கைப்பிடி சுவர் 4 பக்கங்களும் கட்டப்பட்டுள்ளது. இவை கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 4 மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மாடங்களும் சீக்கிய கட்டடக் கலையை பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. 3வது தளத்தின் மைய்ப் பகுதியில் பிரதான பிரார்த்தனை மண்டபம் அமைந்துள்ளது. இதில் சிறிய சதுர வடிவிலான அறை 3 வாயில்களை கொண்டதாக அமைந்துள்ளது. இங்கு தொடர்ந்து குருகிராந்த் சாகிப் வாசிக்கப்பட்டு வருகிறது.
பொற்கோயிலின் கட்டடக் கலை இஸ்லாமிய மற்றும் இந்து சமயங்களிடையே இணக்கத்தை எதிரொலிப்பதாக அமைந்துள்ளது. உலகில் உள்ள கட்டடக் கலை சார்ந்த சிறந்த இடமாக பொற்கோயில் விளங்கி வருகிறது. இந்திய கலை வரலாற்றில் சீக்கிய கட்டடக் கலையின் சின்னமாக விளங்குகிறது.
எவ்வாறு செல்வது
நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சாலை, ரயில் மற்றும் விமான மார்கமாக அமிர்தசரசுக்கு எளிதில் சென்றடையும் வசதிகள் உள்ளன.