சிவபெருமானின் மகன் விநாயகர் பலர் வழிபடும் ஒரு கடவுள். பக்தி சிரத்தையுடன் எழுப்பப்பட்டு எண்ணற்ற பக்தர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாம் வணங்கும் ஒரு தெய்வம் விநாயகர்.
ஸ்ரீ சித்தி விநாயகர் விக்ரகம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இது சுமார் 750 மி.மீ. அல்லது 2 அடி 6 அங்குலம் உயரமும், 2 அடி (600 மி.மீ.) அகலமும் உடையது. இந்த விநாயகர் விக்ரகத்தின் தனிச் சிறப்பு என்னவெனில் வழக்கமாக எல்லா விநாயகர் விக்ரகத்திலும் தும்பிக்கை இடது புறமாக வளைந்திருக்கும், இதில் வலது புறமாக வளைந்திருக்கும் என்பதே. இது வழக்கத்துக்கு மாறான ஒரு விநாயகர் விக்ரகம் என்றால் மிகையாகாது.
மேல் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் இந்த விநாயகர் விக்ரஹம் தாங்கி நிற்கிறது. கீழ் வலது கையில் ஜப மாலையும், இடது கையில் ஒரு கிண்ணம் முழுதும் "மோதகமும்" உள்ளது. வலது தோளிலிருந்து இடது வயிறு வரை பூனூலை ஒத்த ஒரு பாம்பு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றையும் விட விசித்திரகமாக இந்த விநாயகருக்கு நெற்றிக்கண் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வினாயகர் விக்ரஹத்தின் இருபுறமும் ரித்தி மற்றும் சித்தி என்ற இரண்டு பெண் தெய்வங்களின் விக்ரஹங்கள் காணப்படும். விநாயகர் விக்ரகத்திலிருந்து பின்புறமாக முளைத்து வருவது போன்ற தோற்றத்தில் ரித்தி மற்றும் சித்தி விக்ரகங்கள் இருக்கும். இந்த இரண்டு பெண் தெய்வங்களுடன் விநாயகர் காட்சியளிப்பதால் இந்தக் கோயில் சித்தி விநாயகர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ரித்தி மற்றும் சித்தி என்ற பெண் தெய்வங்கள் தூமை, வெற்றி, செல்வச் செழிப்பு மற்றும் வளமான வாழ்வு ஆகியவற்றை குறிக்கின்றனர்.
வெற்றி, வளப்பம், மற்றும் செல்வம் ஆகியவற்றின் தெய்வங்களே இந்த ரித்தி மற்றும் சித்தி. அதிர்ஷ்டகரமான இந்த ஸ்ரீ சித்தி விநாயகரின் விக்ரகத்தில் தும்பிக்கை வலதுபுறமாக வளைந்திருப்பது தனிச் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் பொதுவாக விநாயகர் விக்ரகங்களில் தும்பிக்கை இடது புறமாகவே வளைந்திருப்பதை நாம் பார்க்கலாம்.
இந்த விக்ரகம் உள்ள கோயிலின் கர்ப்ப கிரகம் அவ்வப்போது மாற்றப்பட்டுக் கொண்டே வரப்பட்டுள்ளது. இறுதியாக இப்போது இந்த அபாரமான அமைப்பாக எழுந்தருளியுள்ளது. இதற்கான பூசை புனஸ்காரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றவண்ணம் இருக்கும். பூஜை புனஸ்காரங்கள் பொதுவாக 15 நாட்கள் வரை நீடிக்கும்.1801
ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வியாழக்கிழமை இந்த பழைய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புனிதத் தலமாக்கப்படுகிறது. நம் இந்து நாட்காட்டியின் படி இது கார்திகை ஷுத சதுர்தசியாகும். இந்த கோயில் அப்போது 3.60க்கு 3.60 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்தது. இது தரைத்தளத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது. 450 மி.மீ. அடர்த்தியுள்ள செங்கல் சுவர்கள் மற்றும் செங்கல்லில் ஒரு கோபுரம் அதன்மேல் ஒரு கலசம் என்று அமையப்பெற்றிருந்தது. கோயிலின் தரைமட்டமும் சாலையின் தரைமட்டமும் ஒரே அளவில் இருந்தது.
இந்த கோயில் பிரபாதேவியில் காகா சாஹேப் மற்றும் எஸ்.கே. போல் மார்க்கத்தின் மூலையில் உள்ளது. இந்த இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலை மாதுங்காவில் உள்ள காலஞ்சென்ற செல்வந்தப் பெண்மனி திருமதி தியூபாய் பாட்டிலின் நிதியுதவி மற்றும் உத்தரவுகளின் பேரில் காலஞ்சென்ற கட்டிட காண்ட்ராக்டர் திரு. லக்ஷ்மண் விது பாட்டில் கட்டினார். திருமதி தியூபாய் பாட்டில் பணக்காரராக இருந்தாலும் அவர்களுக்கு குழந்தை இல்லை.
விநாயகர் மேல் அளவு கடந்த பக்தி கொண்டிருந்த இந்த பெண்மணி தனக்கு புத்திர பாக்கியம் அளிக்க விநாயகர் கடவுளை தினமும் வேண்டி வணங்கி வந்தார். தனது புத்திர பாக்கிய ஆசை நிறைவேறினால் விநாயகருக்கு கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். ஆனால் இதற்கிடையே தியூபாய் பாட்டிலின் கணவர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார்.
மிகச் சிறந்த பக்தையான இவரின் மனதில் விநாயகர் கோயில் கட்ட தான் வேண்டிக் கொண்டது மனதில் ஆக்ரமித்திருந்தது என்பதைக் கூறத் தேவையில்லை. தனது வழிபாட்டை தொடர்ந்து நடத்தி வந்த இவர் கோயில் கட்டி விடுவது என்ற சபதத்தை நிறைவேற்றினார். நாட்காட்டியில் உள்ள விநாயகர் திருவுருவம் போல் கோயில் விக்ரகம் அமையுமாறு ஆலோசனைகளை வழங்கி வந்தார். ஆனால் அந்த நாட்காட்டியில் இருந்த விநாயகர் பாங்கங்கா வாக்லேஷ்வரில் உள்ள விக்ரகத்தை ஒத்திருந்தது. இது 500 ஆண்டுகால புராதனத் தன்மையுடையது.
இந்த கோயிலை கட்டும் நோக்கம் தியூபாய் பாட்டிலுக்கு ஒரு நாள் விநாயகர் வழிபாட்டின் போது உதயமானது. அவர் "எனக்கு குழந்தை இல்லாவிட்டாலும், குழந்தை பாக்கியம் இல்லாத மற்ற பெண்மணிகள் இந்த கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் புத்திர பாக்கியம் அருள வேண்டும்" என்று மனமாற விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டார்.
பிறகு இந்த கோயிலுக்கு ஏற்பட்டுள்ள புகழ், தியூபாய் பாட்டிலின் பிரார்த்தனை நிறைவேறியதை காட்டுவதாகத்தான் உள்ளது என்றால் அது மிகையாகாது. "நவசச்சா கணபதி" அல்லது "நவசால பவனார கணபதி" என்று மராத்தியில் பரவலாக அறியப்படுகிறார் இந்த சக்தி வாய்ந்த சித்தி விநாயகர். "நவசால பவனார கணபதி என்றால் எளிமையாகவும் உண்மையாகவும் வேண்டிக் கொண்டால் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் கணபதி என்று பொருள்.
எப்படிச் செல்வது :
இந்தியாவின் வர்த்தகத் தலை நகரம் மும்பை. இங்கு வருவதற்கு விமானம், ரயில் மற்றும் தரை வழி மார்க்கங்கள் உள்ளன.
எங்கு தங்குவது :
கோயில் நிர்வாகத்தினர் தங்குவதற்கு சத்திரமோ, ஓய்விடமோ கட்டவில்லை. எனினும், ஏகப்பட்ட தங்கு விடுதிகள் உள்ளன. இவை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற கட்டணத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.