இக்கோயிலில் அளிக்கப்படும் பிரசாதத்தைப் பெறுவதற்கு செவ்வாய் கடவுளே கிளிகள் வடிவத்தில் வருவதாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். மேஷம், விருட்சிக ராசிகளின் கடவுள் புதன். தங்களுடைய ஜாதகத்தில் 4வது, 7வது, 12வது இடத்தில் செவ்வாயை கொண்டிருப்போர் அவரை சாந்தப்படுத்த இக்கோயிலிற்கு வந்து வழிபாடு செய்கின்றனர். மார்ச் மாதத்தில் அங்காரக சதுர்த்தியில் மங்கள்நாதருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. அந்த குறிப்பிட்ட நாளில் சிறப்பு யாகமும் செய்யப்படுகிறது. செவ்வாயை சாந்தப்படுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இதற்காக உஜ்ஜைனிற்கு வருகின்றனர். செவ்வாயின் கோபத்தை தணிக்க மங்கள்நாத் கோயிலிற்கு வந்து வழிபட வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன. தங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள புதிதாக திருமணம் ஆனவர்கள் ஆயிரக்கணக்கில் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர்.
இங்கு செவ்வாய்க்கிழமை வந்து வழிபடுவதும், அங்காரக சதுர்த்தியில் வந்து வழிபடுவதும் சிறப்பானதாகும். ஆனால், நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இத்திருத்தலத்திற்கு வரலாம். செவ்வாய்க்கிழமை மட்டும் சிறப்புப் பூஜைகள் உண்டு.
எப்படிச் செல்வது?
சாலை மார்க்கமாக :
இந்தோரில் இருந்து 55 கி.மீ., போபாலில் இருந்து 175 கி.மீ., கண்டுவாவில் இருந்து 185 கி.மீ., ரட்லமில் இருந்து 90 கி.மீ. - பேருந்து அல்லது கார் மூலமாகச் செல்லலாம்.
ரயில் மார்க்கமாக :
மும்பை, டெல்லி, இந்தோர், போபால், கண்டுவா ஆகிய இடங்களில் இருந்து உஜ்ஜைனிற்கு நேராக ரயிலில் செல்லாம்.
விமான மார்க்கமாக :
இந்தோர் விமான நிலையத்தில் இருந்து 65 கி.மீ.
எங்கே தங்கலாம்?
ஏராளமான விடுதிகள் உள்ளன. தர்மசாலாவும் உள்ளது. மஹாகாள் தர்மசாலா கமிட்டி, ஹர்ஷித் கமிட்டி ஆகியவற்றில் சாதாரண கட்டணத்திலும், அதிகக் கட்டணத்திலும் வசதியான தங்கும் இடங்களும் உள்ளன.